நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றவாளிகளைத் தடுத்து வைக்க உள்துறை அமைச்சு 11 தற்காலிக சிறைச்சாலைகளை அமைத்துள்ளது என்று பாதுக்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். அவை ஏப்ரல் 23 முதல் தொடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“நான் சமீபத்தில் கூறியது போல், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய கைதிகளுக்கு சிறப்பு சிறைச்சாலையை அரசாங்கம் அமைத்துள்ளது”.
“இன்று, உள்துறை அமைச்சின் மூலம் அரசாங்கம் 11 தற்காலிக சிறைச்சாலைகளை அறிவித்துள்ளது. இந்த தற்காலிக சிறைச்சாலைகள் 23 ஏப்ரல் 2020 ஆம் தேதி தொடங்கும். சுகாதார அமைச்சு அங்கு சுகாதார ஊழியர்களை அமர்த்த உதவும்” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக நேற்றுவரை நாடு முழுவதும் 1,111 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்மாயில் கூறினார்.