கோலாலம்பூர் மொத்தவிற்பனை சந்தை இப்போது பி.கே.பி.டி.-யின் கீழ் உள்ளது

கோலாலம்பூர் மொத்தவிற்பனை சந்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள் தீவிர நடமாட்டுக் கட்டுப்பாடு (பி.கே.பி.டி) உத்தரவின் கீழ் வைக்கப்படும் சமீபத்திய இடமாக உள்ளது.

விவரங்கள் இன்னும் தெளிவற்றதாக இருந்தாலும், மலேசியாகினி தளத்தைப் பார்வையிட்டபோது, அங்கு மலேசிய காவல்துறையினர் மற்றும் மலேசிய ஆயுதப் படைகள் அவ்விடத்தை இறுக்கமாகக் கட்டுப்படுத்தியுள்ளது தெரிந்தது.
பத்துமலை அருகிலுள்ள அந்த மொத்தவிற்பனை சந்தை நுழைவாயிலில் இருந்து ஸ்ரீ முர்னி அடுக்குமாடி குடியிருப்பு வரை இப்பகுதியைச் சுற்றி முள்வேலிகள் போடப்பட்டுள்ளன.

காவல்துறையினரும் இராணுவத்தினரும் ஒவ்வொரு சந்திப்பிலும் சாலைத் தடைகளை அமைத்து, கட்டுப்படுத்துவதையும் தடுப்பதையும் காண முடிந்தது. மேலும் அந்த பகுதிக்குள் நுழைய விரும்பும் நபர்களைத் திரும்புமாறும் வழிநடத்தினர்.

ஆயுதப்படை தளபதி ஜெனரல் அஃபெண்டி புவாங் இன்று மதியம் 1 மணியளவில் இப்பகுதியை விட்டு வெளியேறுவதைக் காண முடிந்தது. நிலைமையைக் கண்காணிக்க அவர் தளத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

சில பாதுகாப்புப் பணியாளர்களின் கூற்றுப்படி, இந்த இடம் இன்று நள்ளிரவில் தொடங்கி தீவிர நடமாட்டுக் கட்டுப்பாடு (பி.கே.பி.டி) உத்தரவின் கீழ் வைக்கப்படும் என்று தெரிகிறது.

பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சமீபத்திய பி.கே.பி.டி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்பப்படுகிறது.