மலேசியாவில் இன்று 38 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,780 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இன்று எந்த மரணமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். இதுவரை கோவிட்-19 பாதிப்பால் நாட்டில் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 98 ஆக உள்ளது.
நேற்று நண்பகல் வரை 100 பேர் குணமடைந்துள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார். இதுவரை மொத்த குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,862 அல்லது 66.8 சதவீதமாக இருக்கிறது.
சிகிச்சையில் உள்ளவர்களில், 36 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) உள்ளனர். ஐ.சி.யுவில் உள்ள கோவிட்-19 நோயாளிகளில், 15 பேருக்கு சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படுகிறது என்று நூர் ஹிஷாம் கூறினார்.

























