கோவிட்-19: பெட்டாலிங் ஜெயா சந்தை மூடப்பட்டது

ஏப்ரல் 25 ஆம் தேதி ஒரு வியாபாரி கோவிட்-19க்கு நேர்மறையாக சோதனை செய்யப்பட்ட பின்னர் பழைய பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சந்தை இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக இன்று காலை அங்கு கிருமிநாசினி துப்புரவு பணி செய்யப்பட்டது. மேலும், ஜாலான் ஓத்மானில் சாலையில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் புதன்கிழமை (ஏப்ரல் 29) சந்தையில் நடைபெரும் சுகாதார பரிசோதனைக்கு வர ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விஷயத்தை பெட்டாலிங் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுத் தலைவர் ஜோஹரி அப்துல் இன்று மலேசியாகினிக்கு அறிவித்தார்.

நோயாளியின் சோதனை முடிவுகள் குறித்து அவர்களுக்கு நேற்று அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“அந்நோயாளி ஏப்ரல் 18 அன்று, அதிக காய்ச்சலின் காரணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் ஏப்ரல் 25 அன்று கோவிட்-19க்கு சாதகமானார். அந்த நேரத்தில், அவர் சந்தைக்கு வரவில்லை.”

“இந்த புதன்கிழமை நடக்கும் (ஸ்கிரீனிங்) பிணிப்பாய்வு சோதனையில் கலந்து கொள்ள அனைத்து வர்த்தகர்களையும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்”.

“இருப்பினும், அறிகுறிகள் உள்ளவர்கள் பரிசோதனைக்கு மருத்துவமனைக்குச் செல்வது நல்லது” என்று ஜோஹரி கூறினார்.

தாமான் மெகாவின் காலை சந்தைக்குப் பிறகு கோவிட்-19 தொற்று காரணமாக பெட்டாலிங் ஜெயாவில் மூடப்பட்ட இரண்டாவது சந்தை இதுவாகும்.

நேற்று, சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தாமான் மெகா சந்தையில் ஒரு வியாபாரி, கிருமிக்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள 60 வியாபாரிகளும் சோதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.