நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக துணை சுகாதார அமைச்சர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் எக்ஸ்கோ ரஸ்மான் ஜகாரியா ஆகியோர் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள்.
பேராக் காவல்துறைத் தலைவர் ரசருதீன் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளார்.
“நாளை காலை கெரிக் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுவார்கள்” என்று அவர் கூறினார்.
நூர் அஸ்மி மற்றும் ரஸ்மான் ஆகியோர் காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாகினி ரஸ்மானை தொடர்பு கொண்டபோது, இது குறித்து போலீஸாரால் தனக்கு அறிவிக்கப்பட்டதாக கூறினார்.
“ஆம், எனக்கு தகவல் கிடைத்தது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், மேலும் கருத்து தெரிவிக்க ரஸ்மான் மறுத்துவிட்டார்.
“பரவாயில்லை, நாளை காத்திருங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.
நூர் ஆஸ்மி கருத்தளிக்கவில்லை.
நூர் அஸ்மி ஏப்ரல் 17 அன்று லெங்காங்கில் உள்ள ஒரு மதப் பள்ளியில் தன் குழுவுடன் எடுத்த சில படங்களை முகநூலில் வெளியிட்டிருந்தார்.
படத்தில், அவர் பல நபர்களுக்கு பொருட்களை ஒப்படைப்பதைக் காணலாம். பேராக் எக்ஸ்கோ உட்பட கூடல் இடைவெளியை கடைபிடிக்காமல் சுமார் 20 நபர்கள் ஒன்றாக சாப்பிடுவதும் அப்படத்தில் காணப்பட்டது.
நூர் அஸ்மி மற்றும் ரஸ்மான் இதற்கு முன்பு மன்னிப்பு கோரியுள்ளனர்.
தொற்று நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் 2020 இன் பிரிவு 7(1) இன் கீழ், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறும் நபருக்கு RM1,000 வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.