நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதாக துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் எக்ஸ்கோ உறுப்பினர் ரஸ்மான் ஜகாரியா ஆகியோர் பேராக், கெரிக் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தி ஸ்டார் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த இரு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் இருந்த மேலும் 13 பேர் மீதும் இன்று குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் அனைவரும் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாகான் செராய் நாடாளுமன்ற உறுப்பினரான நூர் அஸ்மியும், ரஸ்மானும் காலை 9.20 மணி அளவில் கெரிக் மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 28 வரை அமலில் இருக்கும் ஒரு நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதாக, தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு 2020 (Peraturan-Peraturan Pencegahan dan Pengawalan Penyakit Berjangkit (Langkah-Langkah Di Dalam Kawasan Tempatan Jangkitan) 2020) சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.