துணை சுகாதார அமைச்சருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றத்திற்கு துணை சுகாதார அமைச்சருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த விருந்தில் கலந்துகொண்டு நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக, துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலிக்கு ஜெரிக்கில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அதிகபட்ச தண்டனையான RM1,000 அல்லது ஒரு மாதம் சிறைத்தண்டனையை விதித்தது.

பேராக் எக்ஸ்கோ உறுப்பினர் ரஸ்மான் ஜகாரியா மற்றும் மேலும் 13 பேருக்கும் இத்தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் மாஜிஸ்திரேட் நோர்ஹிடாயாத்தி முகமட் நஸ்ரோ அவர்களுக்கு தண்டனையை விதித்தார்.

அவர்கள் அனைவரும் அபராதத்தைச் செலுத்தினர்.