ஒரு மேசைக்கு 4 பேர் மட்டுமே – உணவகங்களில் ‘புதிய நடைமுறை’

மே 4 ஆம் தேதி தொடங்கி, நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி) கீழ், உணவகங்களில் வாடிக்கையாளர்கள் நான்கு பேருக்கு மேல் இல்லாத வகையில் சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்து வாடிக்கையாளர்களும் தங்கள் பெயர், மைக்கேட் எண், தொலைபேசி எண் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் மற்றும் உடல் வெப்பநிலையை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, மேசைகளுக்கிடையேயான தூரம் குறைந்தது இரண்டு மீட்டர் இருக்க வேண்டும்.

உணவக உரிமையாளர்களும் கைத்தூய்மி மற்றும் கை கழுவும் வசதிகளை வழங்க வேண்டும்.

இந்த வழிகாட்டுதல்களை உணவகங்கள், உணவு மையங்கள், கியோஸ்க்குகள் மற்றும் சாலையோர உணவுக் கடைகளுக்கு பொருந்தும்.

இதற்கிடையில், மூடப்பட்ட அனைத்து காலை மற்றும் உழவர் சந்தைகள் மே 4 முதல் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இங்கு கூடல் இடைவெளி விதிகள் கட்டாயமாக கடைபிடிக்கப்படவேண்டும், மற்றும் உடல் வெப்பநிலை கட்டாயமாக எடுக்கப்பட வேண்டும்.

கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தை போன்ற சில சந்தைகள், முன்பு போல் 24 மணி நேரத்திற்கு செயல்பட அனுமதிக்கப்படவில்லை.

பொதுவாக, வாடிக்கையாளர்கள் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை சந்தைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் காலை மற்றும் உழவர் சந்தைக்கு, காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி வரை செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இயக்க நேரம் முடிந்தவுடன் அனைத்து சந்தைகளும் கிருமிநாசினிக்கு உட்படுத்தப்பட வேண்டும்.