நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நாளை முதல் தளர்த்தப்பட்டாலும், கோவிட்-19 பாதிப்பைத் தடுக்க மாநில அரசு மற்றும் வணிகத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், வளாகத்தின் உரிமையாளர் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பராமரிக்கலாம் என்று இஸ்மாயில் கூறினார்.
“பல துறைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் தேர்வு செய்யலாம். உதாரணமாக, உணவகம். உணவக உரிமையாளர்கள் இன்னும் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டிருந்தால், அவர்கள் தொடர்ந்து ‘டெலிவெரி’ அல்லது எடுத்துச் செல்லும் சேவைகளை மட்டும் தொடரலாம்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் புத்ராஜெயாவில் கூறினார்.
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.பி) நாளை முதல் நடைமுறைக்கு வந்தாலும், பகாங் மற்றும் சரவாக் உள்ளிட்ட பல மாநில அரசுகள் மத்திய அரசின் முடிவைப் பின்பற்றப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.