பி.கே.பி.பி.: சிலாங்கூர் மாநிலத்தின் முடிவு சட்டபூர்வமான அதிகாரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.பி) பின்பற்ற சிலாங்கூர் மாநிலம் மறுத்துள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள வணிகங்கள் முழுமையாக செயல்பட அனுமதிக்கப்படாது என்ற முடிவை நிலைநிறுத்தியுள்ளது.

இம்முடிவு, மாநில எல்லைக்கு உட்பட்டது என்று சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதீன் ஷாரி கூறினார்.

“நான் மற்ற மாநிலங்களைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், சிலாங்கூர் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு சட்டத்தின் எல்லைக்கும் அதிகார வரம்புக்கும் உட்பட்டது என்று நான் நம்புகிறேன்.”

“சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றுவதற்கான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று அவர் இன்று சிலாங்கூரில் உள்ள ஷா ஆலாமில் செய்தியாளர்களிடம் கூறினார்.