நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி) கீழ் இரவு 10 மணிக்குப் பிறகு அல்லது மாவட்ட எல்லை தாண்டிய நடமாட்டங்களுக்கான கட்டுப்பாடு இனி இருக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
“மாவட்டங்களுக்கு இடையில் பயண கட்டுப்பாடும், வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தின் அடிப்படையில் வரம்பும் இனி இல்லை.”
“புதிய விதிகளின் கீழ், முன்பு போல் வரம்பு இல்லை” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மாநில எல்லை தாண்டிய பயணம் குறித்து, தடை இன்னும் பொருந்தும் என்றும், ஆனால் அதிகாரிகளிடம் செய்யப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மே 7 முதல் 10 வரை பயணம் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநில எல்லை தாண்டிய பயணங்களுக்கு பொதுப் போக்குவரத்து பயன்பாடு குறித்த விவகாரத்தை காவல் துறை இன்னும் ஆலோசித்து வருவதாகவும் இஸ்மாயில் கூறினார்.
“எத்தனை பேருந்துகள் தேவை என்று போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.”
“மாநிலங்களுக்கு இடையேயான பயண இயக்கங்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை, எனவே விரைவு (எக்ஸ்பிரஸ்) பேருந்துகள் போன்ற பொது வாகனங்கள் இன்னும் இயக்கத்தில் இல்லை” என்று அவர் கூறினார்.