பொருளாதாரத்தை மீண்டும் திறக்காத மாநில அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்ற அஸ்மின் அலியின் அறிக்கையை எச்சரிக்கை என்றும் அது நினைவூட்டல் அல்ல என்றும் லிம் கிட் சியாங் கருதுகிறார்.
“என்ன ஒரு சோகமான விளக்கம்!” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
அந்த மூத்த (பொருளாதார) அமைச்சரின் “எச்சரிக்கை” மிகவும் அசாதாரணமானது என்று லிம் கூறினார்.
இதன் மூலம் அஸ்மின் மத்திய-மாநில உறவுகளுக்கிடையே ஒரு மோசமாக உணர்வை ஏற்படுத்தியுள்ளார் என்று வர்ணித்த லிம், பிரதமர் முகிதீன் யாசினை தலையிடுமாறு வலியுறுத்தினார்.
“கொரோவைரஸைக் கட்டுப்படுத்தவும், மலேசிய பொருளாதாரத்தை காப்பாற்றவும் மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளும் ஒரே சிந்தனையில் இருப்பதை உறுதி செய்ய பிரதமர் அனைத்து மாநில அரசாங்கங்களையும் சந்திக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
பொருளாதாரத்தை மீண்டும் திறக்க மறுத்தால் மாநில அரசுகள் தொழில்துறையின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்ற தனது முந்தைய அறிக்கை அச்சுறுத்தல் இல்லை என்று நேற்று அஸ்மின் விளக்கினார். மாறாக, நாட்டை மீட்டெடுக்க மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை என்பதை நினைவூட்டுவதாக அஸ்மின் கூறினார்.
முன்னதாக, பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், அஸ்மினின் அறிக்கை ஆணவமாகவும், திமிராகவும், அஸ்மின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைப் போல செயல்படுவதாகவும் கூறினார்.