அர்மாடா அம்னோவை நிராகரிக்கிறது, பாக்காத்தானுக்கு திரும்ப விரும்புகிறது

பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவு (அர்மாடா), அம்னோவுடன் ஒத்துழைப்பை நிராகரிக்க முடிவு செய்துள்ளது, அதற்கு பதிலாக பாக்காத்தானுடன் மீண்டும் கூட்டு சேர விரும்பம் தெரிவித்துள்ளது.

எக்ஸ்கோ உறுப்பினர்கள், மாநில இளைஞர் பிரிவு தலைவர்கள் மற்றும் பெர்சத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமதுவும் கலந்து கொண்ட சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அர்மடா கூறியுள்ளது.

“கூட்டத்தின் உறுப்பினர்கள் கலந்துரையாடி, இறுதியாக அர்மாடா அதிகாரப்பூர்வ நிலைபாட்டை அமைக்க ஒப்புக் கொண்டுள்ளது. இது அம்னோவுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற டாக்டர் மகாதீரின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறது.”

“(அத்துடன்) கடந்த 14வது பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்டுள்ளபடி மக்களின் ஆணையை திரும்ப கொடுப்பது மற்றும் பாக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து பணியாற்றுவது” என்று அர்மடா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூட்டத்திற்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் எட்டப்பட்டதாகவும், மீதமுள்ளவர்கள் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் அர்மாடா கூறியுள்ளது.

துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதிர் கூறியது போல், பெர்சத்து பாக்காத்தானுக்கு திரும்ப வேண்டும் என்ற அழைப்புக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பெர்சத்து தலைவர் மார்சுகி யஹ்யா, 14வது பொதுத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டபடி பாக்காத்தான் சிறந்த அணி என்று கூறினார்.

“பாரிசான் விட்டுச்சென்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாக்காத்தானுக்கு திரும்பி வருவதற்கான சிறந்த வழி இது” என்று அவர் கூறினார். மகாதீருக்கும் முகிதீன் யாசினுக்கும் இடையிலான மோதலைத் தொடர்ந்து, பெர்சத்து பொதுச்செயலாளராக மர்சுகியின் நியமனம் தற்போது சர்ச்சையில் உள்ளது.