கோவிட்-19: 39 புதிய பாதிப்புகள், பெரும்பாலும் பி.கே.பி.டி பகுதியில் பதிவாகியுள்ளன

39 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று நண்பகல் வரை பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,467 ஆக உள்ளது.

மொத்தத்தில், 38 பாதிப்புகள் உள்ளூர் பாதிப்புகள் என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
“தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.டி) கீழ் உள்ள குழுமம் மற்றும் வட்டாரங்களிலிருந்து மொத்தம் எட்டு புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

புதிய பாதிப்புகளில், 30 பேர் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவர்கள் என்று நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

74 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து இன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,776 ஆக உள்ளது, இது மொத்தத்தில் 73.9 சதவீதம் ஆகும்.

“கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,584 ஆகும். அவை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) மொத்தம் 19 கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில், எட்டு நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.

மலேசியாவில் கோவிட்-19 நோயினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உள்ளது. இன்று மதியம் வரை புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.