பொருளாதாரத்தின் பிற துறைகளைத் திறப்பதற்கு முன்பு பி.கே.பி.பி.-யை கண்காணிக்க வேண்டும்

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி.) விளைவுகளை முதலில் கண்காணித்த பிறகே மேலும் பொருளாதாரத் துறைகளை மீண்டும் திறக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்த விரும்புகிறது சுகாதார அமைச்சு.

நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், இரண்டு வாரங்களுக்குள் ஒரு முடிவை எடுப்பார் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நம்புகிறார்.

“மே 4 முதல் பி.கே.பி.பி. மூலம் நாங்கள் தளர்வுகளை அளித்து வருகிறோம், மேலும் இரண்டு வாரங்களுக்குள், பாதிப்புகளில் அதிகரிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை நாங்கள் கண்காணிப்போம்.”

“இன்னும் அதிக பொருளாதாரத் துறைகளைத் திறக்க (குறிப்பாக சிகையலங்கார சேவைகள், முடிதிருத்தும் நிலையங்கள்), பிரதமருக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன் நிலைமையை கண்காணிப்போம்” என்று அவர் கூறினார்.

வெளிநாடுகளில் முடிதிருத்தும் சேவையில் இருந்து கோவிட்-19 தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளதால், மலேசியாவிலும் இதுவரை முடிதிருத்தும் கடை மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.

“இது இன்னும் அனுமதிக்கப்படவில்லை. ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் இந்த சேவையில் இருந்து நோய்த்தொற்றுகள் குறித்து தகவல்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.