“உங்கள் இலக்கை நோக்கி மட்டும் செல்லுங்கள்” – இஸ்மாயில் சப்ரி

கெராக் மலேசியா விண்ணப்பத்தின் கீழ் மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ளும் மக்கள், அனுமதிக்கப்பட்ட பயணத்தின் போது மற்ற இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.

பரிந்துரைக்கப்பட்ட வழியை மட்டுமே அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் புத்ராஜெயாவில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

“காவல்துறைக்கு அளித்த விண்ணப்பத்தில், அவர்கள் சென்றடையும் இலக்கு எழுதப்படும்.”

உதாரணமாக, ஜோகூரிலிருந்து ஒருவர் கோலாலம்பூருக்குச் செல்வதை இலக்காக பதிந்து இருந்தால், அவர் மலாக்கா அருகில் இருக்கும் போது, மலாக்காவில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு நோம்பு திறக்க பயணத்தை மாற்றக் கூடாது. அதற்கு அனுமதி கிடையாது.”

“அவர் தொடர்ந்து காவல்துறையினரிடம் விண்ணப்பித்த இடத்தை நோக்கியே செல்ல வேண்டும். நோம்பு திறக்க, காரில் உணவைக் கொண்டு செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.