மே 18, ஒரு நாள் மட்டுமே திட்டமிடப்பட்ட நாடாளுமன்றக் கூட்டம், எட்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அவசர முன்மொழிவைப் பெற்றுள்ளார் நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிஃப் முகமட் யூசோஃப்
இன்று ஒரு அறிக்கையில், ஆரிஃப், பத்து சாப்பி நாடாளுமன்ற உறுப்பினர் லீவ் வுய் கியோங்கிடமிருந்து ஒரு பரிந்துரையைப் பெற்றதாகக் கூறினார். மேலும் அதில் சிலவற்றை ஏற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
லீவ் வுய் கியோங்கின் நான்கு பரிந்துரைகள்:
- பிரதமர் முகிதீன் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்.
லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மகாதீர் முகமது மீது நம்பிக்கை வாக்கெடுப்பு.
நாடாளுமன்றத்திற்கு அதன் சொந்த நடைமுறைகளை ஒழுங்குபடுத்த உரிமை உண்டு, எந்தவொரு ஒழுங்குமுறைகளுக்கும் கட்டுப்பட வேண்டியதில்லை, குறிப்பாக நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டியதில்லை.
நாடாளுமன்றம் ஒரு நாளில் இருந்து எட்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
“கொடுக்கப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில், அவசரம் இல்லை என்பதால் சிலவற்றை நிராகரிக்க முடிவு செய்துள்ளேன். சில, ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஏனெனில் இது பொதுமக்களின் நலனுக்காக, விரைவாக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
எந்த பகுதி பெறப்பட்டது, அல்லது அது எப்போது நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் என்று ஆரிஃப் குறிப்பிடவில்லை.