கோவிட்-19: சிவப்பு மண்டலம் 11 ஆக அதிகரிப்பு

கோவிட்-19 சிவப்பு மண்டல பகுதிகளின் எண்ணிக்கை நேற்று 11 ஆக உயர்ந்துள்ளது. ரெம்பாவில் சமீபத்திய பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஒரு சிவப்பு மண்டலப் பகுதி அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் (MOH) தரவுகளின்படி, ரெம்பாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 59 ஆக அதிகரித்துள்ளது. இதனால் முன்பு மஞ்சள் மண்டலமாக இருந்த அந்த பகுதி இப்போது சிவப்பு மண்டலமாகி உள்ளாது.

ஒன்று முதல் 40 செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளைக் கொண்ட பகுதிகளை மஞ்சள் மண்டலம் என குறிக்கிறது, சிவப்பு மண்டலத்தில் 40க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளன. கோவிட்-19 பாதிப்புகள் ஏதும் இல்லாத பகுதி பச்சை மண்டலமாக பெயரிடப்படும்.

நேற்று, ரெம்பாவின் பெடாஸில் உள்ள ஒரு தொழிற்சாலையில், வெளிநாட்டு தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டது என்று தெரியவந்ததாக டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

முதல் தொற்று நோயாளி, ஒரு தொழிற்சாலை தொழிலாளி ஆவார். அவர் ஏப்ரல் 5 ஆம் தேதி பாதிப்பு அறிகுறிகளைக் காட்டியுள்ளார். ஏப்ரல் 12 அன்று நேர்மறையாக சோதிக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, மொத்தம் 786 தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அந்நோயாளிகளின் நண்பர்களும் பிணிப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மற்ற 10 சிவப்பு மண்டல பகுதிகள் – கோலாலம்பூரில் தலைநகரம் (144), கம்போங் பாரு (67) மற்றும் ஸ்ரீ பெட்டாலிங் (45); சரவாக்கில் கூச்சிங் (100) மற்றும் கோத்தா சமராஹான் (43); சிலாங்கூரில் கோம்பக் (80), ஹுலு லங்காட் (55) ) மற்றும் பெட்டாலிங் (53), ஜோகூரில் குளுவாங் (49).

இதற்கிடையில், மொத்த மஞ்சள் மண்டலங்கள் 77 ஆகவும், பச்சை மண்டலங்கள் 113 ஆகவும் இருக்கின்றன.