கோவிட்-19 தினசரி நேரடி ஒளிபரப்பில் இருந்து ‘ஓய்வெடுக்கிறது’ சுகாதார அமைச்சு

சுகாதார அமைச்சு இன்று ‘சிறிது நேரம்’ ஓய்வெடுக்கிறது. வழக்கமான முறையில் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று இல்லை என்று தெரிவித்தது.

பிப்ரவரி 27 ஆம் தேதி கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் இரண்டாவது அலை தொடங்கிய பின்னர், அமைச்சு இன்று முதல் தடவையாக நேரடி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவில்லை.

கோவிட்-19 தினசரி பதிப்பு அறிக்கை மாலை 5 மணிக்குப் பிறகு செய்யப்படும். சுகாதார அமைச்சின் தினசரி பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்ப்பது பெரும்பாலான மலேசியர்களுக்கு தினசரி வழக்கமாகிவிட்டது, குறிப்பாக நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு தொடங்கியதிலிருந்து இது நமக்கு வழக்கமாகிவிட்டது என்பது உண்மையே.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மே 12 ஆம் தேதி முடிவடைய உள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் பிரதமர் முகிதீன் யாசின் இது இன்னும் தொடருமா என்பது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதைக்கு, பெரும்பாலான வணிகங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினரும் நாடுகளுக்கிடையில் நடமாட்டத்தை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக, சாலைத் தடைகளை நீக்குகின்றனர்.