பிரதமர் முகிதீன் யாசின் இன்று ஒரு சிறப்பு செய்தியில், சில நிபந்தனைகளின் கீழ் நோம்புப் பெருநாள் உபசரிப்புகள் நடத்த முடியும் என்று விளக்கினார்.
ஒரே நேரத்தில் அதிகபட்சம் 20 பேருக்கு மிகாமலும் ஒரே மாநிலத்தில் வசிக்கும் குடும்பங்களிடையேயும் மற்றும் அண்டை அயலார் இடையே மட்டுமே நோம்புப் பெருநாள் உபசரிப்புகள் அனுமதிக்கப்படுகின்றன என்றார் முகிதின்.
“ஒரே நேரத்தில் அதிகபட்சம் 20 நபர்களுடன் ஒரே பகுதியில் வசிக்கும் அண்டை அயலார் மற்றும் ஒரே மாநிலத்தில் வசிக்கும் குடும்பங்களிடையே பயணங்கள் அனுமதிக்கப்படுகிறது.”
“எனவே பெரிய விருந்து அல்லது திறந்த இல்ல உபசரிப்பு ஏதும் தேவையில்லை” என்று அவர் இன்று ஒரு சிறப்பு செய்தியில் கூறினார்.