குணமடைந்து மீட்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 5,025 அல்லது 75.5 சதவீதத்தை எட்டியுள்ளது.
இன்று 96 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இன்று பிற்பகல் நிலவரப்படி 67 புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன, அவற்றில் 49 வெளிநாட்டினர் சம்பந்தப்படவை ஆகும்.
கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையைச் சுற்றியுள்ள தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு பகுதியில் (பி.கே.பி.டி) ஒரு மலேசியர் பாதிக்கப்பட்டுள்ளார்.
மொத்தம் 6,566 பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
பெடாஸ், நெகேரி செம்பிலானில் உள்ள குழுமத்தில் 43 பாதிப்புகள் அதிகரித்து, மொத்தம் 131 உயர்ந்துள்ளது. அவற்றில் 122 வெளிநாட்டினர் சம்பந்தப்படவை ஆகும்.
இதற்கிடையில், சாவ் கிட் சந்தைக் குழுமம் 5 புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்தது.
இதுவரை 108 பேர் இறந்துள்ள நிலையில், புதிய இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

























