பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தான் குற்றமற்றவர் என்பதையும் தன் தலைமைத்துவத்தின் தரத்தையும் நிரூபிக்க முயற்சிப்பதில் கவனம் செலுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார்.
ஒரு வீடியோ வெளியீட்டில், அவர் மலேசிய அரசியலின் நிலையற்ற தன்மை பற்றி பேசினார்.
“மலேசியாவின் அரசியல் எவ்வாறு மாறிவிட்டது என்பதை நான் காண்கிறேன், எதையும் கணிப்பது கடினம். எதிர்பாராதது கூட நடக்கலாம் (சிரிக்கிறார்).”
“எனவே நான் திரும்பி வர விரும்புகிறேனா இல்லையா என்பது இல்லை.”
“ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் களங்கப்படுத்தப்பட்ட எனது பெயரை தெளிவாக்க விரும்புகிறேன், மக்களுக்கு உதவ எனது தலைமைத்துவத்தைக் காட்ட விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நஜிப்புக்கு, தற்போது தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அதிகாரப்பூர்வ பதவி ஏதும் இல்லாவிட்டாலும், பி.என். ஆலோசகராக இருந்து வருகிறார்.
முன்னாள் பிரதமரான அவர், RM2.28 பில்லியன் சம்பந்தப்பட்ட 1MDB வழக்குகள், அ¨னைத்துலக SRC வழக்குகள் (RM42 மில்லியன்), IPIC வழக்குகள் (RM6.68 பில்லியன்) என்று மொத்தம் ஐந்து வழக்குகளில் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்கிறார்.
1MDB வழக்கு விசாரணை மே 19 அன்று மீண்டும் தொடங்கும். RM42 மில்லியன் SRC விசாரணை ஜூன் 1 ஆம் தேதி விசாரிக்கப்படும். அதே நேரத்தில் 1MDB மற்றொரு விசாரணை ஜூன் 15 ஆம் தேதி மீண்டும் தொடங்கும். இதற்கிடையில், RM27 மில்லியன் SRC வழக்கு மற்றும் RM6.6 பில்லியன் IPIC வழக்கு இன்னும் தொடங்கப்படவில்லை.