TNB தலைவராக மஹாட்ஸீர் நியமனம் குறித்து மஸ்லீ கேள்வி

தற்போது விசாரணையில் உள்ள சூரிய மின்சக்தித் திட்ட வழக்குடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தெனகா நேஷனல் பெர்ஹாட்டின் (TNB) தலைவராக அம்னோ துணைத் தலைவர் மஹாட்ஸீர் காலித் நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மஹாட்ஸீரின் பெயரை மேற்கோள் காட்டவில்லை என்றாலும், அவரது அறிக்கை முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த அந்த அம்னோ தலைவருமான மஹாட்ஸீரைத் தான் குறிப்பிட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

“ஏற்கனவே நடந்து வரும் சரவாக் கிராமப்புற பள்ளிகளில் சூரிய திட்ட வழக்கைப் பாருங்கள். வழக்குத் தொடரப்பட்டதிலிருந்து தங்களைத் தானே காப்பாற்றிக்கொள்ள விரும்பும் நபர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு சண்டையிட்டு வருகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.”

“துரதிர்ஷ்டவசமாக, பாக்காத்தான் அரசு மாற்றப்படுவதற்கு முன்பாகவே விசாரணை தீர்க்கப்பட முடியவில்லை. இன்று, சூரிய ஆற்றல் திட்ட வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்ட ஒருவர் அரசு-இணைக்கப்பட்ட நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்படுகிறார் (இதுவும் “ஆற்றல்” தொடர்பான நிறுவனம்)” என்று அவர் இன்று வெளியிட்ட முகநூல் பதிவில் கூறினார்.

மலேசியாகினி மஹாட்ஸீரைத் தொடர்பு கொண்டு அவரது பதிலுக்காகக் காத்திருக்கிறது.

“இந்த கட்சிக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறதா?” பெர்சத்து கட்சியின் உள் கொந்தளிப்பு குறித்து மஸ்லீ கருத்து தெரிவித்தார்.

மே 8 அன்று, பாடாங் தெராப் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மஹாட்ஸீர் TNB-யின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

TNB வெளியிட்ட ஓர் அறிக்கையில், மஹாட்ஸீரின் பதவி நியமனம் மே 12 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

புதிய தலைவராக மஹாட்ஸீர் நியமிக்கப்பட்டதை TNB-யின் இயக்குநர்கள், நிர்வாகம் மற்றும் TNB-யின் அனைத்து ஊழியர்களும் வரவேற்பதாக TNB தலைமை நிர்வாக அதிகாரியுமான அமீர் ஹம்சா அஜீசன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோருக்கு எதிரான சூரிய ஆற்றல் ஊழல் வழக்கு விசாரணைக்கு மஹாட்ஸீர் ஒரு சாட்சியாக உள்ளார்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ள அவ்வழக்கு, சரவாக் நகரில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளில் சூரிய மின்சக்தி வழங்குவதற்கும் நிறுவுவதற்குமான நிதி, முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது குறித்ததாகும்.

அரசாங்கத்தில் தூய்மையான அமைச்சர்களை நியமிக்கப்படுவதை விரும்பும் ஒரு சில மத தலைவர்களின் வாதம் குறித்து மஸ்லீ கேள்வி எழுப்பினார்.

ஆனால் அதே நேரத்தில், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களை (ஜி.எல்.சி) வழிநடத்த இதுபோன்ற ‘பிரச்சனை’ உள்ள நபர்களை அரசாங்கம் நியமித்துள்ளது என்று குற்றம் சாட்டுகிறார் மஸ்லீ.