பணமோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து ரிசா அஜீஸ் சமீபத்தில் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கவலை தெரிவித்தார்.
“இந்த மாதிரியான வழக்கை இப்படி தீர்ப்பது சாத்தியமாகுமா? பேச்சுவார்த்தைகள் மற்றும் கொஞ்சம் பணம் செலுத்துவதன் மூலம் வழக்கு முடிந்துவிடுமா? RM1 பில்லியனை எடுத்து விட்டு, RM100 மில்லியனை மட்டும் திருப்பி செலுத்தினால், வழக்கு முடிந்துவிடுமா?”
“நாளை, யாரோ ஒருவர் 10 கோழிகளைத் திருடிவிட்டு, ஒன்றுக்கு மட்டும் பணம் செலுத்தினால் அது சரியாகிவிடும். அதே போல், 10 மோட்டார் சைக்கிளைத் திருடி விட்டு, ஒரு மோட்டார் சைக்கிளுக்கான பணத்தை மட்டும் திருப்பிச் செலுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினால் அதுவும் சரியாகிவிடும். விதிகள் ஒன்று தான், அதனால் அதை மிகவும் இலகுவாகத் பார்க்காதீர்கள்.” என்று அன்வார் கூறினார்.