இன்று தொடங்கி, அனுமதியின்றி மாநிலம் கடந்து பயணம் செய்யும் சாலை பயனர்கள் திருப்பி அனுப்பப்படுவது மட்டுமல்லாமல், அபராதமும் விதிக்கப்படுவர்.
இதற்கு முன்பு, விதிகளை மீறும் சாலை பயனர்களைத் திரும்பி செல்ல மட்டுமே காவல்துறை அறிவுறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
“இன்று முதல், அவர்கள் திரும்பிச் செல்வது மட்டுமல்லாமல், அபராதத்தை செலுத்த வேண்டியிருக்கும்” என்று புத்ராஜெயாவில் கோவிட்-19 குறித்த தினசரி ஊடக மாநாட்டில் அவர் கூறினார்.
சாலைத் தடைகள் தீவிரமானது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாலும், அனுமதியின்றி பயணம் செய்வதை அதிகாரிகள் விரும்பவில்லை என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய விதிகளின் கீழ், SOPஐ மீறி மாநில எல்லையை கடக்க முயற்சிப்பதற்காக கைது செய்யப்படும் ஓட்டுனருக்கு RM1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அதை அந்நபர் இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடைகளை ஏற்கனவே மீறி ஊருக்குத் திரும்பியுள்ள நபர்கள் குறித்து, அவர்கள் திரும்பி வரும்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் இஸ்மாயில் சப்ரி.