கோவிட்-19: 30 புதிய பாதிப்புகள், 17 வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவை

மலேசியாவில் மேலும் 30 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரையிலான மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,762 ஆக உள்ளது.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் மூன்று இறக்குமதி பாதிப்புகள் மற்றும் 27 உள்ளூர் தொற்றுகள் என்றார்.

27 உள்ளூர் தொற்றுநோய்களில், 17 பாதிப்புகள் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டவையும், 10 பாதிப்புகள் உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்டவை என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.

இதற்கிடையில், 95 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இன்றுவரை மொத்த குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 6,330 அல்லது 81.55 சதவிகிதமாக உள்ளது.

மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,317 ஆக உள்ளது.

புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் நூர் ஹிஷாம் இன்று தெரிவித்தார். மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உள்ளது.