தானியங்கி பண இயந்திரங்களுக்கான (ATM) செயல்பாட்டு நேரம் நாளை இயல்பு நிலைக்கு திரும்புகிறது

அன்றாட வங்கி நடவடிக்கைகளுக்கு வசதியாக அமையும் வண்ணம் தானியங்கி பண இயந்திரத்தின் செயல்பாடு, நாளை முதல் மீண்டும் வழக்கம் போல் தொடங்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“இருப்பினும், ஏடிஎம் இயந்திரங்களைக் கையாளும் போது பொதுமக்கள் கூடல் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் நிபந்தனைகுட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.பி) குறித்த தினசரி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (சிபிபி) அமல்படுத்தியதைத் தொடர்ந்து, ஏடிஎம் இயந்திரத்தின் செயல்பாடு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே என கடந்த ஏப்ரல் மாதம் அரசாங்கம் அறிவித்தது. இது, கோவிட்-19 பாதிப்பை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.