இன்று பிற்பகல் பிரதமரின் சிறப்பு செய்தி, மக்கள் எதிர்பார்ப்பு

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (பி.கே.பி.பி) வரும் செவ்வாய்க்கிழமை நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்தும், குறுகிய கால பொருளாதார மீட்புத் திட்டம் குறித்தும் பிரதமர் முகிதீன் யாசினின் சிறப்பு செய்தி இன்று மக்களால் நிச்சயம் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு செய்தி உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் பிற்பகல் 3 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பின்னோக்கிப் பார்த்தால், கோவிட்-19 தொற்றுநோய் பாதிப்பைத் தொடர்ந்து, மலேசியா மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (பி.கே.பி) அமல்படுத்தியது. அதைத் தொடர்ந்து பி.கே.பி.பி மே 4 முதல் தொடங்கியது.

குறைந்துவரும் புதிய அன்றாட நேர்மறையான பாதிப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிபிபி மற்றும் பி.கே.பி.பி செயல்பாடு பலனளித்துள்ளது எனலாம். இதனால் சமூகத்தினர் நலனுக்காக அதிக பொருளாதாரத் துறைகளைத் திறக்க உதவியுள்ளது.

முகிதீன் வழங்கும் சிறப்பு செய்தி இந்த நாட்டு மக்களால் குறிப்பாக பொருளாதாரத் துறையில் உள்ளவர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.