சினி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை கட்சி நிறுத்தாது என்று பி.கே.ஆர் அறிவித்துள்ளது.
ஆகவே, பாக்காத்தான் ஹராப்பான், தன் வேட்பாளரை களம் இறக்கவில்லை என்பதையும் இது குறிக்கிறது என்று பி.கே.ஆர் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பட்ஸில் மலேசியாகினியிடம் கூறினார்.
நாட்டில் கோவிட்-19 பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படாத நிலையை கவனத்தில் கொண்ட பின்னர் கட்சி இந்த முடிவை எடுத்ததாக பி.கே.ஆர் பொதுச் செயலாளர் சைபுதீன் நாசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.
“இதனிடையே, புதிய விதிமுறைகளின் பின்னணியில், வாக்காளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார அம்சங்களை கவனத்தில் கொண்டு, தேர்தல்களுக்கு முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட இயக்க நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.-க்கள்) தயாரிக்கப்படுகின்றன.”
“அந்த நிர்ணயிக்கப்பட்ட இயக்க நடைமுறைகள், தேர்தல் பிரச்சாரம் மற்றும் களம் இறங்கி வேலை செய்யும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பி.கே.ஆர் கருதுகிறது.”
“எடுத்துக்காட்டாக, பொது மேடைப் பேச்சுக்கு கூடக்கூடிய 20க்கும் மேற்பட்டவர்களுக்கான தடையை ஆராய வேண்டும், மேலும் வீடு வீடாக பிரச்சாரம், கூடாரங்கள் மற்றும் தேர்தல் பணிகளுக்குத் தயாராகும் சூழலில் அல்லது நடைமுறையில் உள்ள பிற விஷயங்களுக்கான நடைமுறை குறித்து இதுவரை எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை,” என்று இன்றைய ஊடக அறிக்கையில் அவர் கூறினார்.
நாடு கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது, முதன்முதலில் நடைபெறும் இடைத்தேர்தல் பகாங் சினியின் இடைத்தேர்தல் ஆகும்.
முன்னதாக, பாக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்த கூட்டணியான பி.கே.ஆர், சினி இடைத்தேர்தலில் தன் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று மூத்த அம்னோ பொதுச்செயலாளர் முஸ்தபா யாகூப் பரிந்துரைத்திருந்தார்.
சினி நீண்ட காலமாக பாரிசானின் கோட்டையாக உள்ளது என்றும், பாரிசான் மற்றும் பாஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வலிமையுடன் ஒப்பிடுகையில் பாக்காத்தான் ஹராப்பான் தோல்வியையே அடையும் என்றும், முஸ்தபா கூறியிருந்தார்.
பாஸ் கட்சி இந்த இடைத்தேர்தலில் எந்த வேட்பாளர்களையும் நிறுத்தாது என்றும், பாரிசான் உறுப்பினர்களின் புதிய கூட்டணியான தேசிய கூட்டணி (பிஎன்) வேட்பாளரை ஆதரிப்பதாகவும் முன்னதாக அறிவித்தது.
இதனிடையே, பாக்காத்தான், “கொள்கையின் அடிப்படையில்” இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அமானாவின் தொடர்பு இயக்குனர் காலித் சமாட் தெரிவித்தார்.
சினி இடைத்தேர்தல் உட்பட ஒவ்வொரு தேர்தலிலும் ஊழல் இல்லாத, தூய்மையான மற்றும் சுதந்திரமான நிர்வாகத்தை உறுவாக்க மக்களை ஒன்றிணைப்பது பாக்காத்தானின் பொறுப்பாகும் என்று காலித் கூறினார்.
தேர்தல் ஆணையம் வேட்பு மனு தேதியாக ஜூன் 20-ம், ஜூன் 30 ஆம் தேதி முதற்கட்ட வாக்களிப்பும், ஜூலை 4 ஆம் தேதி வாக்களிக்கும் நாளாகவும் நிர்ணயித்திருக்கிறது.