முன்னாள் சபா முதல்வர் மூசா அமான், லஞ்சம் மற்றும் பணமோசடி ஆகிய 46 குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமது ஜமீல் உசின் இன்று காலை நீதிமன்ற விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவரின் விண்ணப்பத்தை அனுமதித்து, மூசா அமானை விடுவித்தார்.
முன்னதாக, வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை இன்றி தற்காலிகமாக விடுவிக்க (Discharge Not Amounting to Acquittal (DNAA) வேண்டும் என்று அரசு தரப்பு கோரியிருந்தது.
மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, மூசா அமானின் வழக்கறிஞர் பிரான்சிஸ் எங் தனது கட்சிக்காரர் விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
“ஆம், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் டான் ஸ்ரீ மூசா விடுவிக்கப்பட்டார்” என்று பிரான்சிஸ் எங் தெரிவித்தார்.
முன்னதாக, மூசா அமான், தன் மீது சுமத்தப்பட்டுள்ள 46 குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்ய விண்ணப்பத்தை தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.