மலேசியாவில் இன்று ஏழு புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில், ஆறு இறக்குமதி தொற்றும், ஓர் உள்ளூர் தொற்றும் பதிவாகியுள்ளன. பதிவான அந்த ஓர் உள்ளூர் பாதிப்பும் ஒரு வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டதாகும்.
கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 8,336 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
281 நோயாளிகள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு நாளில் மிக உயர்ந்த கோவிட்-19 மீட்பு வீதத்தை காட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இது மொத்த மீட்டெடுப்பை 6,975 பேருக்கு அல்லது மொத்த பாதிப்புகளில் 83.7 சதவீதத்திற்கு கொண்டு வந்துள்ளது.