ஐந்தாம் மற்றும் ஆறாம் படிவ – பொதுத் தேர்வு மாணவர்களுக்கு பள்ளி அமர்வு ஜூன் 24 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றின் ஆலோசனையைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ராட்ஸி ஜிடின் விளக்கினார்.
“மலேசிய கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்)/Sijil Pelajaran Malaysia (SPM), மலேசிய தொழில் சான்றிதழ் (எஸ்.வி.எம்)/Sijil Vokasional Malaysia (SVM), மலேசிய உயர் கல்விச் சான்றிதழ் (எஸ்.டி.பி.எம்)/Sijil Tinggi Pelajaran Malaysia (STPM), மற்றும் மலேசிய உயர் மதச் சான்றிதழ் (எஸ்.டி.ஏ.எம்.)/Sijil Tinggi Agama Malaysia (STAM) பொதுத் தேர்வுகள் மற்றும் அனைத்துலக தேர்வு (Peperiksaan Antarabangsa) மாணவர்களுக்கான பள்ளி தொடக்க நாள் 24 ஜூன் 2020 புதன்கிழமை என்று கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது,” என்று அவர் இன்று சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.