தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மலேசியர்கள் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்று ஏதும் இல்லாமல் இருந்த நிலையில், இன்று சுகாதார அமைச்சு 31 புதிய பாதிப்புகளை அறிவித்தது.
சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, நாட்டில் மொத்த கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கை 8,369 என்று இன்று புத்ராஜெயாவில் தனது தினசரி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
31 புதிய பாதிப்புகளில், 11 பாதிப்புகள் வெளிநாட்டு நோய்த்தொற்றுகள், இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.
“உள்நாட்டில் பரவியுள்ள 20 பாதிப்புகளில், 19 குடிமக்கள் அல்லாதவர்களும், ஒரு மலேசியர் சம்பந்தப்பட்டுள்ளதும் ஆகும். இந்த ஒரு பாதிப்பு சிலாங்கூரில் உள்ள ஒரு தா•பிஸ் மையத்தில் கண்டறியப்பட்டதாகும்” என்று அவர் கூறினார்.
மலேசியர் அல்லாதவர்களிடையே உள்ள 19 பாதிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு:
- நெகிரி செம்பிலான் பொடாஸ் திரளையில் 16 பாதிப்புகள்;
சிலாங்கூர் காம்போங் சுங்கை லூய் திரளையில் 1 பாதிப்பு;
கோலாலம்பூர் துப்புரவு நிறுவனம் திரளையில் 1 பாதிப்பு;
சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 1 பாதிப்பு.
டாக்டர் நூர் ஹிஷாம் 51 பாதிப்புகள் மீட்கப்பட்டதாகவும், இன்று அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இது மருத்துவமனையில் இருந்து முழுமையாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 7,065 அல்லது மொத்த பாதிப்புகளில் 84.4 சதவீதமாகக் கொண்டுவருகிறது.
நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 1,186 என்று அவர் அறிவித்தார்.
அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் கூறினார்.
கோவிட்-19 இன் ஐந்து நேர்மறையான பாதிப்புகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றன.
“கோவிட்-19 தொடர்பான இறப்புகளில் அதிகரிப்பு இன்று இல்லை. இதனால், மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பினால் ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 118 அல்லது மொத்த பாதிப்புகளில் 1.41 சதவீதமாக உள்ளது” என்று அவர் கூறினார்.