டிஏபி எதிர்ப்பு, இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பதாக அச்சுறுத்து, என்று, நாடு தீவர வலதுசாரி அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, என்றும், பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் வரை, நாடு தொடர்ந்து “இருளில்” தான் இருக்கும் என்று அமானாவின் துணைத் தலைவர் முஜாஹித் யூசோப் ராவா, கூறினார்.
“தேசிய கூட்டணியின் கீழ், மலேசியா மேலும் மேலும் பழமைவாத கொள்கைகளை உள்ளடக்கிய அரசியலுக்கு மாறுவதை நாம் காண்கிறோம்.”
“இனவாதமும் இன வெறுப்புமே தேசிய கூட்டணியின் உயிர்நாடியாக இருக்கிறது. இதனால் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது.”
“‘இஸ்லாம்-மலாய்க்காரர்கள் பிரச்சினை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இன உறவுகளுக்கிடையே நல்லிணக்கத்தில் விரிசலும் இடைவெளியும் ஏற்பட்டுள்ளது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மிரட்டல், அச்சுறுத்தல் மற்றும் குறிப்பிட்டவர்கள் மீதான குற்றவழக்குகள் என்று அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளின் மூலமே அரசாங்கம் சார்ந்துள்ளது என்று பாக்காத்தான் அரசாங்கத்தின் முன்னாள் மத அமைச்சரின் கூறியுள்ளார்.
“அதிகாரத்தைக் கைப்பற்றி, மக்களின் ஆணையை மறுத்து, நல்லாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.”
“பாக்காத்தான் அரசாங்கம் மக்களின் ஆணையைத் திரும்பப் பெறாத வரை நாட்டிற்கு இருண்ட காலம் தான்”.
பாக்காத்தான் மற்றும் அதன் கூறு கட்சிகள் இப்போது அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வருகின்றனர் என்று பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறியதை அடுத்து முஜாஹித் இப்படியான கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த முஜாஹித், தேசிய கூட்டணி, நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் புறக்கணித்துள்ளது என்றார்.
மே 18 அன்று ஒரு நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவர் குறிப்பிட்டார். இது மாமன்னரின் அரச உத்தரவைக் கேட்க மட்டுமே நடைபெற்றது.
“தனது கவனத்தை இழந்து, அதிகாரத்தை தக்க வைத்து கொள்வதில் மட்டுமே ஆர்வம் கொண்ட ஒரு அரசாங்கம். அதிகாரத்திற்காக அரசியல் கொள்கைகளை அடமானம் வைக்கிறது”.
அரசாங்கம் அறிவித்த பொருளாதார தூண்டுதல் தொகுப்பு குறித்து கண்டிக்கப்பட்டபோது, முகிதீன் அதைப் பொருட்படுத்தவில்லை, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் இரண்டாவது தூண்டுதல் தொகுப்பையும் அறிவித்தார், என்று கூறினார்.
முக்கிய நபர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு ஊழல் வழக்குகள் கைவிடப்பட்டதையும் முஜாஹித் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு பெரிய ஊழல் வழக்கிலிருந்தும் பெரும் புள்ளிகள் விடுதலை செய்யப்படும் போது, நீதி நிலைநாட்டப்படும் செயல்கள் மோசமடைந்து கொண்டே போகிறது என்று அவர் கூறினார்.
“முதலில் ரிசா அஜீஸ், பிறகு, சமீபத்தில் அமான் மூசா. இதன் பிறகு, நஜிப் ரசாக் மற்றும் அகமட் ஜாஹித் ஹமிடி ஆகியோரும் ஊழல் குற்றசாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றே ஊகிக்கமுடிகிறது. இப்படியாக, மற்றவர்களும் ‘நற்செய்திக்காக’ காத்திருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.