கோவிட்-19: குடிநுழைவு தடுப்பு முகாம் மற்றும் தஃபிஸ் தொற்றுகள், 43 புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு

இன்று 43 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,445 ஆக கொண்டுவந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“அறிவிக்கப்பட்ட 43 புதிய பாதிப்புகளில், நான்கு பாதிப்புகள் மலேசியர்கள் சம்பந்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நோய்த்தொற்றுகள். ஒரு பாதிப்பு மலேசியர் அல்லாத நிரந்தர குடியுரிமை பெற்றவர் சம்பந்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நோய்த்தொற்று,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் தினசரி ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

இதற்கிடையில், 38 உள்ளூர் தொற்றுநோய்களில், 15 மலேசியர்கள், மற்றும் 23 மலேசியர் அல்லாதவர்கள் ஆகும்.

“புக்கிட் ஜலீல் குடிநுழைவு தடுப்பு முகாமில் வசிப்பவர்களிடையே மொத்தம் 21 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்கள் நெகேரி செம்பிலான் போர்ட் டிக்சனில் உள்ள மலேசிய குடிவரவு அகாடமிக்கு (ஏஐஎம்) மாற்றப்பட்டுள்ளனர்.”

“காய்கறி மொத்த விற்பனையாளர் சந்தையில் ஒரு பாதிப்பு உள்ளதாக சபாவின் பெனாம்பாங் சுகாதார அலுவலகம் கண்டறிந்துள்ளது.

“பகாங் டெமர்லோவில் வெளிநாட்டு பண்ணை தொழிலாளர் பாதிப்பு ஒன்று” என்று அவர் மேலும் கூறினார்.

மலேசிய உள்ளூர் தொற்றுநோய்களில், ஏழு தஃபிஸ் பள்ளிகளிலிருந்து, அதாவது சிலாங்கூரில் இரண்டு, நெகேரி செம்பிலனில் மூன்று, மற்றும் பேராக் மற்றும் மலாக்காவில் தலா ஒன்று கண்டறியப்பட்டது.

ஒரு புதிய இறப்பும் பதிவாகியுள்ளது. இது இறப்பு எண்ணிக்கையை 120 ஆகக் கொண்டுவருகிறது.

சமீபத்திய இறப்பு 96 வயதான மலேசிய பெண், ஜூன் 12 ஆம் தேதி சபாவில் தன் வீட்டில் இறந்துள்ளார், அவரது உடல் குவின் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் நோய்க்கு நேர்மறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுக்கான காரணம் இன்னும் கண்டறியப்பட்டு வருகிறது.