பாலர், மழலையர் பள்ளி மற்றும் நர்சரிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு அதன் நிலையான இயக்க நடைமுறையை முன்வைத்த பின்னர், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான அமைச்சர்களின் சிறப்புக் கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
“ஜூலை 1 முதல் பாலர் மற்றும் மழலையர் பள்ளி திறக்க சிறப்பு கூட்டம் ஒப்புக் கொண்டுள்ளது.”
“விரிவான எஸ்.ஓ.பி. (SOP) கல்வி அமைச்சினால் அறிவிக்கப்படும்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் நடந்த கோவிட்-19 தினசரி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் கீழ் 6,216 பாலர் பள்ளிகளும், தனியாருக்குச் சொந்தமான 7,887 பாலர் பள்ளிகளும், தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் கீழ் 1,781 மழலையர் பள்ளிகளும், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் 8,530 கெமாஸ் பாலர் பள்ளிகளும் உள்ளன.