2 உப்கோ சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்

கினாபாலு ஐக்கிய முற்போக்கு அமைப்பு (உப்கோ)/Pertubuhan Kinabalu Progresif Bersatu (Upko) கட்சியைச் சேர்ந்த இரண்டு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

தற்போது சுயேட்சை உறுப்பினர்களாக இருந்து, தேசிய கூட்டணிக்கு (பி.என்) ஆதரவளிப்பதாக லிமுஸ் ஜூரி (கோலா பென்யு) மற்றும் ஜேம்ஸ் ரதிப் (சுகுட்) அறிவித்துள்ளனர்.

பெனம்பாங்கில் உள்ள லிமுஸின் இல்லத்தில் ஆதரவாளர்கள் முன்னிலையில் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

உப்கோ தலைமையின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் போராட்டத்திற்கு முரணாக இருப்பதாகவும் லிமுஸ் கூறியுள்ளார்.

அவர்களின் இந்நடவடிக்கை உப்கோவில் இப்போது இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

எவ்வாறாயினும், வாரிசான் தலைமையிலான அரசாங்கத்தின் கூட்டணி இன்னும் மாநில சட்டசபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.