அகமட் ஜாஹிட் வழக்கு: சூராவிற்கு அருகில் இருப்பதால் 2 பங்களாக்கள் வாங்கப்பட்டன

சூராவிற்கு அருகாமையில் இருந்ததால், அகமட் ஜாஹிட் ஹமிடியின் அகால்பூடி அறக்கட்டளையுடன் (Yayasan Akalbudi) இணைக்கப்பட்ட ஃபலா அறக்கட்டளை (Yayasan Falah) இரண்டு பங்களாக்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

காஜாங்கின் கன்ட்ரி ஹைட்ஸில் அமைந்துள்ள அந்த பங்களாக்களின் அசல் உரிமையாளரான கார்டன் ஹோல்டிங்ஸ் நிர்வாக இயக்குநர் லீ கிம் தியோங் @ லீ கிம் யூ இந்த விஷயத்தை தெரிவித்தார்.

அகமட் ஜாஹிட் மீதான ஊழல் மற்றும் பண மோசடி விசாரணை வழக்கின் 22 நாள் இன்றாகும். அதல், லீ 57வது சாட்சியாக இருந்தார்.

அல்-ஃபலா அறக்கட்டளையால் வாங்கப்பட்ட அந்த பங்களாக்கள் மதப் பள்ளிகள் மற்றும் தஹ்ஃபிஸ் போன்ற மதப் பகுதியாக மாற்றுவதற்காக வாங்கப்பட்டன என்பது அவருக்குத் தெரியுமா என்று குறுக்கு விசாரணையில் கேட்ட போது லீ இதைக் கூறினார்.

கன்ட்ரி ஹைட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் நிறுவனர் மற்றும் தலைவருமான லீ, அந்த இரண்டு பங்களாக்கள் நீண்ட காலமாக நிர்வகிக்க முடியாத நிலையில் இருந்ததால் குறைந்த விலையில் விற்குமாறு கேட்டுக்கொண்ட அகமட் ஜாஹித்தின் முன்மொழிவுக்கு ஒப்புக் கொண்டதாக கூறினார்.

ஒரு பங்களாவை RM3,022,500க்கு விற்க ஒப்புக்கொண்டார் – பின்னர் அது RM3 மில்லியனுக்கு விற்கப்பட்டது. மற்றொரு பங்களாவை RM2,885,250க்கு விற்க ஒப்புக்கொண்டார். பின்னர் அது RM2.9 மில்லியனுக்கு விற்கப்பட்டது.

அல்-ஃபாலா அறக்கட்டளைக்கு விற்கப்பட்ட அந்த இரண்டு பங்களாவிற்கான RM5.9 மில்லியன் பணம் ஜனவரி 4, 2017 தேதியிட்ட மேபேங்க் காசோலை மூலம் பெறப்பட்டது.

ஆதாரங்களின் அடிப்படையில், அல்-ஃபலா அறக்கட்டளை அகால்பூடி அறக்கட்டளையின் ஒரு திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறப்பட்டது.

அகமது ஜாஹித், அகால்பூடி அறக்கட்டளையின் நிறுவனர், அறங்காவலர் மற்றும் அதன் ஒரே கையொப்பமிடுபவர் ஆவார்.

அஹ்மத் ஜாஹித் 47 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். அவற்றில் 12 குற்றச்சாட்டுகளை அகால்பூடி அறக்கட்டளை நிதி சம்பந்தப்பட்ட நம்பிக்கை மோசடி, எட்டு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் 27 பண மோசடி ஆகியவை அடங்கும்.