பி.எச். பிளஸில் இருந்து இதுவரை பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்கள் பிரதமர் வேட்பாளர் குறித்து இன்னும் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை.

இந்த விவகாரம் தொடர்பான விவாதங்கள் கூறுக் கட்சிகளுக்கும் எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கும் இடையில் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்று பக்காத்தான் பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுஷன் இஸ்மாயில் கூறினார்.

“இறுதி முடிவு எட்டப்பட்டவுடன் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும்” என்று அவர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

“சந்திப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் காத்திருக்க வேண்டும். கூடிய விரைவில் நாங்கள் ஒரு முடிவை எடுப்போம்” என்று அவர் கூறினார்.

பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிம் முன்னதாக பாக்காத்தான் பிளஸ் மகாதீர் முகமதுவை பிரதமராகவும், அன்வார் இப்ராஹிமை அவரது துணைத் பிரதமராகவும் பெயரிட முடிவு செய்ததாகக் கூறப்பட்ட செய்திகளை மறுத்துள்ளார்.

பாக்காத்தான் பிளஸில் அமானா, பி.கே.ஆர், டிஏபி, வாரிசான் மற்றும் டாக்டர் மகாதீருக்கு ஆதரவாக இருக்கும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.

அன்வாரிடம் பதவியை ஒப்படைப்பதற்கு முன்பு மகாதீர் 2020 ஆம் ஆண்டு இறுதி வரை பிரதமராக பணியாற்றுவார் என்று கூட்டணி ஒப்புக் கொண்டதாக ஃபிரி மலேசியா டுடே (Free Malaysia Today) போர்ட்டல் தெரிவித்துள்ளது.

தேசிய கூட்டணியில் (பி.என்) அரசாங்கத்தை கைப்பற்ற போதுமான எண்ணிக்கையை பெற்றுள்ளதாக கூறிய சில வாரங்கள் கழித்து, யார் பிரதமராவது என்பது குறித்து பாக்காத்தான் பிளஸுக்கு இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.