தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எம்.கே.என்) திரையரங்குகள், மசூதிகள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளுக்கு எஸ்ஓபி-க்களை வெளியிட்டுள்ளது.
சில எஸ்ஓபிக்கள் 12 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்களையும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்களையும் திரையரங்குகளுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
கூடுதலாக, அவை பின்வருவனவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றன:
- 37.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உடல் வெப்பநிலை உள்ளவர்கள் அல்லது அறிகுறிகளைக் காண்பிப்பவர்கள் வளாகத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் தொடர்புகளைக் கண்டறியும் நோக்கத்திற்காக MySejahtera பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும்.
- படப்பிடிப்பிற்கு முன்னும் பின்னும் வளாகங்களை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.
- சுத்தம் செய்யும் நடவடிக்கை மற்றும் கிருமி நீக்க நடவடிக்கைகள் ஒரு நாளைக்கு மூன்று முறையாவது செய்யப்பட வேண்டும்.
- இருக்கைகள் ஒரு மீட்டர் கூடல் இடைவெளிக்கு இணங்க வேண்டும்.
எம்.கே.என் மசூதிகள் மற்றும் சூராவ்களுக்கான எஸ்ஓபிகளையும் வெளியிட்டது:
- ஒரு மசூதி அல்லது ஒரு சூராவ், ஜெமா கூட்டத்தின் எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டும்.
- மசூதி அல்லது சூராவ் குழுவில், ஜெமா கூட்டத்திற்கு உதவ போதுமான ஊழியர்கள் இருக்க வேண்டும்.
- மசூதிக்கான கதவு நண்பகலுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே திறக்கப்பட வேண்டும்.
- 12 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
- ஜெமா கூட்டம் தங்கள் சொந்த தொழுகை துணியை கொண்டுவர வேண்டும்.
- ஜெமா கூட்டம் ஒருவருக்கொருவர் கைகுலுக்காமல் இருக்க வேண்டும்.
பேருந்துகள் போன்ற தரை போக்குவரத்திற்கான எஸ்ஓபிகளும் வழிகாட்டுதல்களும் பின்வருமாறு:
- ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் பயணத்தின்போது முகக்கவரி அணிய வேண்டும்.
- அறிகுறிகள் உள்ள பயணிகள் பேருந்தில் ஏறுவதைத் தடுக்கும் உரிமையை பேருந்து ஓட்டுனர் அல்லது நடத்துனர் பெற்றுள்ளார்.
- கூடல் இடைவெளி பற்றி குறிப்பிடப்படவில்லை, ஆனால் பயணிகள் தொடர்புகளை குறைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அரசு மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கு, நிகழ்ச்சி நடைபெறும் இட அமைப்பின் திறனை பொறுத்து பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 250 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தது ஒரு மீட்டராவது கூடல் இடைவெளி இருக்க வேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் நன்கு காற்றோட்டமாக இருப்பதை உறுதிசெய்து, கூடல் இடைவெளியை அனுமதிக்கும் வகையில் உணவு பொட்டலங்களாக செய்யப்பட்டு உண்ணப்பட வேண்டும்.
உடல் வெப்பநிலை மற்றும் இருமல், சளி, தொண்டை வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை சோதனையிட நுழைவாயிலில் சோதனை கவுண்டர்கள் அமைக்கப்பட வேண்டும்.