பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம், பாக்காத்தான் பிளஸ் மன்னிப்பு கோருகிறது

தேசிய கூட்டணியில் இருந்து அரசாங்கத்தை கைப்பற்றுவதே முக்கிய நோக்கமாக உள்ள இவ்வேளையில், பாக்காத்தான் ஹராப்பான் பிளஸ் பிரதமர் வேட்பாளரை இன்னும் இறுதி செய்யவில்லை என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

முடிவெடுப்பதற்கு முன்னர் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அன்வார்.

அவற்றில், மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்துதல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீளுருவாக்கம் செய்வதற்கான சீர்திருத்தக் கொள்கைகள் குறித்து அன்வார் விவரித்தார்.

“அதனால்தான் நாங்கள் (பாக்காத்தான் பிளஸ்) மன்னிப்பு கேட்கிறோம். நம் நாட்டை வழிநடத்தும் தலைமை குறித்த சில அறிவிப்புகளை ஒத்திவைக்க வேண்டியுள்ளதால் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்” என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

கடந்த வாரம் பி.எச். பிளஸ் கூட்டம் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பி.கே.ஆர் தலைமையகத்தில் கூடியது. இதில், தேசிய கூட்டணியின் ஷெரட்டன் நகர்வைத் தொடர்ந்து புத்ராஜெயாவை திரும்பப் பெறுவதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.