புக்கிட் அமானில் விசாரிக்கப்பட்டார் ஹன்னா யோஹ்

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை குறித்து விசாரணைக்கு உதவுவதற்காக செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோஹ்விடமிருந்து காவல்துறையினர் இன்று காலை ஒரு விசாரணையை முடித்துள்ளனர்.

யோஹ் தனது இரண்டு வழக்கறிஞர்களான கோபிந்த் சிங் தியோ மற்றும் சியாரிட்சான் ஜோஹனுடன் புக்கிட் அமானுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஒரு விசாரணை அதிகாரியிடம் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்டார்.

காவல்துறையினரின் விசாரணைக்கு உதவுவதற்காக யோஹ் தனது கைத்தொலைப்பேசி மற்றும் தனது சமூக ஊடக கடவுச்சொல்லை ஒப்படைத்ததாக நிருபர்கள் சந்தித்தபோது கோபிந்த் தெரிவித்தார்.

ஜூன் 11 அன்று, ‘ஹன்னா யோஹ்’ எனும் முகநூலில் அளித்த அறிக்கை தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை நடத்துவதாகத் தெரிகிறது.