இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியா ஆறு புதிய கோவிட்-19 பாதிப்புகளைப் பதிவு செய்து, மொத்த எண்ணிக்கையை 8,231 ஆகக் கொண்டு வந்தது.
இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு பாதிப்புகளும் உள்ளூர் தொற்றுநோய்களின் நான்கு பாதிப்புகளும் பதிவாகியுள்ளன என்றார்.
அவர்கள் அனைவரும் தனிமைபடுத்தப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள்ளூர் தொற்றுநோயின் நான்கு பாதிப்புகளும் மலேசியர் சம்பந்தப்பட்டவை என்றும், அவை சிலாங்கூரில் மூன்று பாதிப்புகளையும், சரவாக்கில் ஒரு பாதிப்பையும் உள்ளடக்கியது என்றார்.
இது மலேசியாவில் செயலில் உள்ள கோவிட்-19 பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கையை 244 ஆக்குகிறது.
சிலாங்கூரில் மூன்று பாதிப்புகள், தஹ்பிஸ் மையத்தில் ஒரு பாதிப்பு, ஹுலு லங்காட் காண்டோமினிய திரளையிலிருந்து ஒரு பாதிப்பு, புக்கிட் பிந்தாங் திரளையில் இருந்து ஒரு பாதிப்பு ஆகும். இதற்கிடையில், சரவாகில் பதிவான ஒரு பாதிப்பு ஒரு கட்டுமான தள திரளையில் கண்டறியப்பட்டதாகும்.
இரண்டு நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், அவர்களுக்கு சுவாச உதவி தேவையில்லை என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 121 ஆக உள்ளது. புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று நூர் ஹிஷாம் இன்று தெரிவித்தார்.
மேலும், புக்கிட் பிந்தாங் திரளை, கூச்சிங்கில் கட்டுமான தள திரளை மற்றும் ஹுலு லங்காட்டில் உள்ள காண்டோமினிய திரளை என்ற மூன்று புதிய திரளைகளை அமைச்சு கண்டறிந்துள்ளதாக நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
புக்கிட் பிந்தாங் திரளையில் ஒன்பது பங்களாதேஷியர்களும் ஒரு மலேசியரும் சம்பந்தப்பட்ட மொத்தம் 10 நேர்மறை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.