10 புதிய பாதிப்புகள், 6 உள்ளூர் நோய்த்தொற்றுகள்

நண்பகல் நிலவரப்படி, மலேசியா 10 புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இதனால் இன்றுவரை நாட்டில் மொத்தம் 8,616 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இன்று பிற்பகல் ஒரு ஊடக அறிக்கையில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மேலும் 14 பேர் மீண்டு வரந்துள்ளதாகக் கூறினார். இது குணமடைந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை 8,308 ஆகக் கொண்டு வந்துள்ளது.

அனைத்து புதிய பாதிப்புகளும் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றன.

மலேசியாவில் செயலில் உள்ள மொத்தம் கோவிட்-19 பாதிப்புகள் 187 ஆகும்.

இரண்டு நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களுக்கு சுவாச உதவி தேவையில்லை.

மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பினால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 121 எனவும், தொடர்ந்து 13வது நாளாக புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் நூர் ஹிஷாம் இன்று அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், 10 புதிய பாதிப்புகள் நான்கு இறக்குமதி பாதிப்புகளையும் ஆறு உள்ளூர் தொற்றுநோய்களின் பாதிப்புகளையும் கொண்டுள்ளன.

இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நோய்த்தொற்றுகளின் நான்கு பாதிப்புகளில், ஒன்று மலேசியர் சம்பந்தப்பட்டதும், மூன்று மலேசியர் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டவை என்றும் அறியப்படுகிறது.

ஆறு உள்நாட்டு பாதிப்புகளில், நான்கு மலேசியர், இரண்டு மலேசிய அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டவை ஆகும்.

மலேசிய குடிமக்களிடையே உள்நாட்டு நோய்த்தொற்று பாதிப்புகள் பின்வருமாறு:

சிலாங்கூர்: ஒரு பாதிப்பு
கோலாலம்பூர்: மூன்று பாதிப்புகள்

மலேசியரல்லாதவர் மத்தியில் உள்நாட்டு தொற்றுநோய்கள் பின்வருமாறு:

நெகிரி செம்பிலன்: ஒரு பாதிப்பு
சபா: ஒரு பாதிப்பு