நான்கு தலைவர்களை நீக்கியது பி.கே.ஆர்

முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலியுடன் தொடர்புடைய நான்கு தலைவர்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளது பி.கே.ஆர்.

அவர்கள் பி.கே.ஆர் மகளிர் தலைவர் ஹனிசா தல்ஹா, பினாங்கு மகளிர் தலைவர் நூர் ஜரீனா ஜகாரியா, இரண்டு பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் அபிப் பஹார்டின் (செபெராங் ஜெயா) மற்றும் சுல்கிப்லி இப்ராஹிம் (சுங்கை அச்சே) ஆகியோர் அடங்குவர்.

இன்றைய மத்திய தலைமைக் கவுன்சில் (எம்.பி.பி) கூட்டத்தின் போது பி.கே.ஆர் இந்த முடிவை எடுத்தது.

தேசிய கூட்டணி அமைப்பதை ஆதரிப்பதற்காக பிப்ரவரி மாதம் அஸ்மின் மற்றும் பத்து உறுப்பினர்கள் பி.கே.ஆரில் இருந்து விலகிய பின் பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.