மூன்று இறக்குமதி பாதிப்புகளில் இரண்டு மலேசியர்கள் சம்பந்தப்பட்டது என்றும் மீதம் ஒன்று நிரந்தர குடியுரிமைப் பெற்ற மலேசியர் அல்லாதவர் தொடர்புடையது என்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு அறிக்கையில் கூறினார்.
“இன்று நாட்டில் மலேசியர் அல்லாதவர்களிடையே பரவல் ஏதுமில்லை” என்று அவர் கூறினார்.
சபாவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையிலும், நேகிரி செம்பிலான் சிரம்பானில் உள்ள ஒரு மருத்துவ மையத்திலும், உள்ளூர் நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டன என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.
“ஜூலை 5, 2020 நண்பகல் வரை, ஐந்து புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
“இது மலேசியாவில் மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,663 ஆகக் கொண்டுவருகிறது. எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 77 ஆகும்.”
“அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை, இதனால் இறப்பு எண்ணிக்கை 121 ஆக உள்ளது.