பாக்காத்தான் தலைமைத்துவ கூட்டம், முன்னாள் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமையே அதன் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நியமிக்க முடிவு செய்துள்ளது.
அரசாங்கத்தை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடர வாரிசான் கட்சியின் தலைவர் ஷாஃபி அப்டால் உட்பட அனைத்து தரப்பினருடனும் தொடர்ந்து விவாதிக்கவும் கலந்துரையாடவும் அன்வாருக்கு இப்போது முழு ஆணை உள்ளது என்றும் அந்த தலைமைத்துவ கூட்டம் தெரிவித்துள்ளது.
ஷாஃபியை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும் திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
“மக்கள் ஆணையை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை என்றும் நாங்கள் நம்புகிறோம்.”
இக்கூட்டு அறிக்கையில் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம், அமானாவின் தலைவர் முகமட் சாபு மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.