கோவிட்-19: இரண்டாவது நாளாக உள்ளூர் நோய்த்தொற்றுகள் இல்லை

நாட்டில் கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ச்சியான நல்ல முடிவுகளைக் காட்டியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக உள்ளூர் தொற்று பாதிப்புகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்பது மனநிறைவை அளிக்கின்றது.

அதோடு, புதிய இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை கடந்த 24 நாட்கள் தொடர்ச்சியாக 121-ஆகவே கொண்டுள்ளது.

சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று ஆறு புதிய பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்றும் அவை அனைத்தும் ஐந்து மலேசியர்கள், மற்றும் ஒரு நிரந்தர குடியுரிமை பெற்றவரின் இறக்குமதி பாதிப்புகள் அதாவது வெளிநாட்டில் ஏற்பட்ட தொற்றுகள் என்றார்.

“இது மலேசியாவில் கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 8,683 ஆகக் கொண்டுவருகிறது. அதே நேரத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 63 ஆகும்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

13 பாதிப்புகள் மீட்கப்பட்டு, இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளன. மொத்த குணமடைந்த கோவிட்-19 பாதிப்புகள் 8,499 அல்லது மொத்த பாதிப்புகளில் 97.9 சதவிகிதமாக உள்ளன.