புதிய துணை சபாநாயகராக அசாலினா தேர்ந்தெடுக்கப்பட்டார்

பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அசாலினா ஓத்மான் சைட் இன்று நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அறிவிக்கப்பட்டார்.

இன்று துணை சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங்கிற்கு பதிலாக 57 வயதான அசாலினா நியமிக்கப்பட்டார்.

முன்னதாக, பிரதமர் முகிதீன் யாசின், சபையின் துணை சபாநாயகராக அசாலினா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் (London School of Economics) பட்டதாரியும், மலேசியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஷரியா சட்ட படிப்பையும் முடித்த அசாலினா, ஜோகூரை சார்ந்தவர். சிவில் மற்றும் வணிக வழக்குகளை கையாள்வதில் விரிவான அனுபவம் பெற்றவர் ஆவார்.