800 ஆண்டுகளாக இப்படி நடந்ததில்லை – ஆரிஃப்

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் பதவியில் இருந்து தன்னை நீக்கியிருக்கும் பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்தின் (பி.என்) செயல், இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமைந்துள்ளது என்று முகமட் அரிஃப் யூசோப் விவரித்தார்.

“இப்போது நடந்திருப்பது சாதாரணமான செயல் அல்ல. டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இப்படி நடந்துள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை.”

“டிரினிடாட் 1990 ஆண்டுகளில், ஊழல் குற்றம் புரிந்ததற்காக அதன் சபாநாயகரை நீக்கியது.”

“ஆனால் ஒரு நாடாளுமன்றம் முடிவதற்கு முன்னர், அதன் சபாநாயகர் அகற்றப்படவில்லை என்பதற்கு 800 ஆண்டுகளாக வேறு எந்த உதாரணமும் இல்லை” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த முடிவை அவர் ஏற்றுக்கொண்டதாகவும், பதவி விலகுவதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் முகமட் ஆரிஃப் கூறினார்.

“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மத்திய அரசியலமைப்பை பின்பற்றி என்னை நீக்கினால் நான் வெளியேருவேன் என்று ஆரம்பத்தில் இருந்தே சொன்னேன்.”

“வாக்குகள் எடுக்கப்பட்டுள்ளன, மத்திய அரசியலமைப்பு சட்டம் பின்பற்றப்பட்டுள்ளது.”

“இறுதி முடிவு நாடாளுமன்ற உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது. பிரதமர் அல்லது அமைச்சரவையால் அல்ல. இதுவே நமது கூட்டாட்சி அரசியல் அமைப்பு” என்று அவர் மேலும் கூறினார்.